மேல் மாகாணத்தை சேர்ந்த 256 பேரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) 21 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவுசெய்துள்ளனர்.
இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றிதழை விமானப்படை வைத்திய அணியுடன் இணைந்து விமானப் படைத்தளத்தின் படைத் தளபதி விஜய ஸ்ரீவர்த்தன வழங்கிவைத்தார்.
இவர்களில் 48 பேர் கந்தக்காடு, புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் ஏனைய 208 பேரும் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று 21 நாட்களை பூர்த்திசெய்தவர்களுடன் அழைத்துவரப்பட்ட முதியவர்கள் இருவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.