தமிழகத்தில் கொரோனா வைஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 906 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி தலைமையின் அறிவிப்பில், சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ராயபுரம் பகுதியில் 56 தெருக்களும், திரு.வி.க.நகரில் 49 தெருக்களும், தேனாம்பேட்டை பகுதியில் 28 தெருக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதனைவிட, தண்டையார்பேட்டையில் 25 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.