தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை நாள்தோறும் சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.
இதற்கமைய இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று மட்டும் தமிழகத்தில் 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சென்னையில் மட்டும் 1082 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.