கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கலந்து பிரதமர் மோடியிடம் பேசியிருந்தார்.
இதன்போது, “ஊரடங்கால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத் துறைக்கு என தனிச் சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள் வாங்க ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். ரயில் மற்றும் விமான சேவைகளை தற்போது தொடங்கக் கூடாது.
ரயில் மூலமாக பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.