கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி, நாடு முழுவதும் அமல்படுத்தினார்.
எதிர்வரும் 14ம் திகதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நாடே வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மகளிர் ஆணையம் இது குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
மார்ச் 23 முதல் ஏப்ரல் 1 வரை 257 இற்கும் மேற்பட்ட பெண்கள் பாதுகாப்புக் கோரி உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் 13 பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்களையும், 69 பெண்கள் குடும்பப் பிரச்னைகள் தொடர்பாகவும், 77 பெண்கள் வரதட்சணை தொடர்பாகவும், சிலர் இணையத்தில் பாலியல் சீண்டல் தொடர்பாகவும் புகார் அளித்துள்ளனர்.
இந்தக் குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ளன.
ஊரடங்கு நேரத்தில் வெளியில் செல்ல முடியாமலும், பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க பெண்கள் அச்சமடைவதும் இந்த குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்க காரணமாக இருப்பதாக மகளிர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தங்களுக்கு எதிரான வன்முறைகளை weinfo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 181 என்ற தொலைபேசி எண்ணுக்கோ புகாராக தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.