LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 23, 2020

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பாதிப்பு எண்ணிக்கையும் உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 புதிய நோயாளர்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில், இன்று காலை குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்கான 23 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,393 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு இலக்கான 1,290 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். அத்துடன் கொரோனா வைரஸ் பெருந்தொடருக்கு இலக்காகி நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 பேர் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தற்போது 16,342 பேர் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியோரில் இதுவரை 4,370 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் அதற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்புக்கு பெருமளவில் குஜராத் இலக்காகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தியாவில் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 3ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7