உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கால் சுமார் 4 கோடி உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் குடியேறிய தொழிலாளர்கள் பெரும் பகுதியினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில நாட்களில் சுமார் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் சென்றுள்ளனர்.
ஊரடங்கு நெருக்கடி காரணமாக தொழிலாளர்கள் உள் இடம்பெயர்வின் அளவு சர்வதேச இடம்பெயர்வுகளை விட இரண்டரை மடங்கு அதிகம் ஆகும்.
இத்தகைய புலம்பெயர்தொழிலாளர்களின் சுகாதார சேவைகள் மற்றும் பண பரிமாற்றம் மற்றும் பிற சமூக திட்டங்களில் அவர்களைச் சேர்ப்பதன் மூலமும், பாகுபாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதன் மூலமும் மாநில அரசுகள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் நெருக்கடி தெற்காசியா பிராந்தியத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு இடம்பெயர்வுகளை பாதித்துள்ளது எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு அனுமதி கோரும் குறைந்த திறமையான புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை எட்டு சதவீதம் அதிகரித்து 2019இல் 3 இலட்சத்து 68 ஆயிரத்து 48 ஆக உள்ளது.