தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும் தேவையான உதவிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் காணொளி உரையாடல் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களோடு, பிரதமர் மோடி காணொளி முறை (Video Conference) மூலம் ஆலோசனை நடத்திவருகிறார்.
மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றார்.
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம், பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஊரடங்கு, புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள், மாநில அரசுக்குத் தேவையான உதவிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்துள்ளார்.





