கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்குவதை எயார் இந்தியா நிறுத்தியுள்ளது.
இதனால் ஏறத்தாழ எயார் இந்தியா நிறுவன விமானங்கள் அனைத்தும் சேவையில் ஈடுபடாமல் தரையில் நிற்கும் நிலையில், ஓய்வுக்கு பிறகும் பணியில் தொடர அனுமதிக்கப்பட்ட 200 விமானிகளுடன் செய்துகொண்ட பணி தொடர்பான ஒப்பந்தத்தை எயார் இந்தியா தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது.
எயார் இந்தியா நிறுவனத்தின் இந்நடவடிக்கைக்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும், வருமானம் பெருமளவு குறைந்திருப்பதுமே காரணம் என அந்நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.