இதையடுத்து அங்கு மொத்தமாக ஆயிரத்து 755 பேர் இதுவரை தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிலைவரப்படி பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.