தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய திரை பிரபலங்கள் பலர் நிதியுதவியளித்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் அஜித் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார்.
அவரைத்தவிர நடிகர் லோரன்ஸ் உள்ளிட்ட பலரும் குறித்த நெருக்கடி நிலையினை சமாளிக்க நிதியுதவி அளித்த நிலையில், நடிகர் விஜய் இதுவரையான காலப்பகுதியில் எதுவித நிதியும் வழங்காமல் இருந்தமை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்நிலையிலேயே நடிகர் விஜய் குறித்த நிதி உதவியினை வழங்கியுள்ளார்.
குறித்த நிதியில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட PM CARES நிதிக்கு 25 லட்ச ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய், பெப்சிக்கு 25 லட்ச ரூபாய், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், பாண்டிச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் என வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.