திகதிகளில் வீடு வீடாகச் சென்று பொருட்களுக்கான சிட்டை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களைப் பெறுவதற்கான சிட்டையை வீடு வீடாகச் சென்று வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான குறித்த சிட்டையில் ரேசன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதோடு, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் குறிப்பிடப்பட்டவாறு ரேசன் கடைக்குச் சென்று பொருட்களை்ப பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை, ரேசன் பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளி நடைமுறையைக் கடைப்பிடித்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.