விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க சார்பில் இவ் வழக்கு தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மையம் வாதிட்டது. இத் தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அஹிம்சா விக்ரமதுங்க இதுவொரு வெற்றியென்றும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கான செய்தியென்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றமை பொறுப்புக்கூறலை தாமதப்படுத்துமே அன்றி தடுக்க முடியாது எனவும் அவரால் பாதிக்கப்பட்ட எம் போன்றவர்கள் நீதிக்காக போராடுவதை ஒருபோதும் கைவிடப்போவதில்லையென அஹிம்சா விக்ரமதுங்க மேலும் தெரிவித்தார்.
லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக இதுவரை இலங்கை அரசு ஏற்கவோ அல்லது மறுதலிக்கவோ இல்லையென இவ் வழக்கில் வாதாடிய நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான மையத்தின் சட்டப் பணிப்பாளர் காமென் செயுங் தெரிவித்தார்.
அஹிம்சா விக்கிரமதுங்க இவ் வழக்கை மீண்டும் தொடர முடியும் என்பது குறித்து நாங்கள் திருப்தி அடைகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.