கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்வதற்கு நீதிமன்றில் பிடியாணை உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்தவகையில் சர்ச்சைக்குரிய மத்திய வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ரவி கருணநாயக்க, அர்ஜுன் அலோசியஸ், அர்ஜுன மகேந்திரன், கசுன் பாலிசேன, ஜெஃப்ரி அலோசியஸ் மற்றும் ஏழு பேரைக் கைது செய்ய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிப்புரையினை சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா இன்று (செவ்வாய்க்கிழமை) பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு விடுத்துள்ளார்.