திட்டமிட்டுள்ளார். அங்கு எதிர்வரம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள பிரசல்ஸ் நகரில் எதிர்வரும் 13ஆம் திகதி இந்தியா – ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அந்த மாநாடு முடிந்ததும் இந்தியா திரும்பும் வழியில் அவர் எகிப்து நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
அங்கு எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரதமர் மோடி இதுவரை எகிப்து நாட்டுக்கு சென்றது இல்லை.
இறுதியாக 2009ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் எகிப்துக்கு சென்றார். அதன் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் எகிப்துக்குச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எகிப்தில் அவர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எகிப்து நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறந்த நட்புறவு உள்ளது. 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒவ்வொரு எகிப்து ஜகாதிபதியும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தியா- எகிப்து இடையே பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது. இதன்படி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கைகள் எடுப்பது, அவர்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வது போன்றவை நடந்து வருகிறது.
மேலும் இந்திய- எகிப்து இராணுவ கூட்டு பயிற்சிகளும் நடைபெறுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே 1978ஆம் ஆண்டு முதல் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தமும் உள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 10 ஆண்டில் மட்டுமே 5 மடங்கு வர்த்தகம் அதிகரித்துள்ளது.
தற்போது எகிப்தில் நைல் திருவிழா நடந்து வருகிறது. இதில் இந்திய நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.