இளைய தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதுடன், மாளவிக்கா மோகன் விஜய்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பலரின் எதிர்பார்ப்பை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி இரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில் தற்போது அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளன.





