இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்உருவான மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளநிலையில் அண்மையில் மாஸ்டர் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தளபதி விஜய் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் விஜய், ஜான் துரைராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜயின் ஐ.டி.கார்டு ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் சென்ட் ஜெப்ரிஸ் என்ற காலேஜில் பணிபுரிபவராக அந்த ஐ.டி.கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.





