தனி விமானம் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் தொள்ளாயிரம் இந்திய மீனவர்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களில் 700 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் கொரானா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அங்கு உணவின்றி அச்சத்தில் தவிக்கும் மீனவர்களை மீட்க தனி விமானம் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்டுள்ள வைகோ, அதேபோல் ஈரானில் தவிப்பவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.