தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3 ஆம் திகதிக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறதுடன் உலகம் முழுவதும் 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் சீனாவின் வூஹான் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இரு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
டெல்லியிலும் சண்டிகரிலும் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு, இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கான விசாவை ரத்து செய்துள்ளது.