LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 29, 2020

மட்டக்களப்பிலுள்ள சகல பொதுச்சந்தைகளும் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்று வந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இந்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.

நாளை காலை 6.00 மணிக்கு ஊரடக்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. அவ்வேளைகளில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொது மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் பல செயற்திட்டங்கள் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்தாகவும் இது மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்றுவந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது என அவர் கூறியுள்ளார்.

இதற்கான மாற்று நடவடிக்கையாக மரக்கறி வகைகளை நடமாடும் சேவையாக சகல வீதிகளுக்கும் வாகனங்கள் ஊடாக எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி கட்டுப்பாட்டு விலைகளில் வழங்க அரசாங்க அதிபரும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளர் ஆர். எப். அன்வர் சதாத்தும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர்.

இதில் பொருட்களை பதுக்கிவைத்தல் அதிக விலைக்கு பொருட்களை விற்பணை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாளை காலை ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பல்பொரு விற்பணை நிலைங்களும் மருந்தகங்களும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கான பொருட்களை வழங்கவுள்ளனர்.

பொது மக்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கன்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும். அதில் முக்கியமாக ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றி வரிசை கிரமமாக தங்களின் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்து கொன்டு அங்கும் இங்கும் அலைவதை தவிர்த்து தங்களின் வீடுகளுக்கு சென்று விடுமாறு வேண்டப்படுகின்றனர்.

கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துளைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துளைப்பை வழங்குவது அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7