LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 2, 2020

யாழ். பல்கலைக்கழகத்தின் பரீட்சை முடிவுகளை வெளியிடுதில் உள்ள தாமதம் இனி இருக்காது- கந்தசாமி

யாழ்ப்பாணம், பல்கலைக்கழகத்தின் பரீட்சை முடிவுகளை
வெளியிடுவதில் ஏற்படும் மிக நீண்ட தாமதம் இனி ஏற்படாது என யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி உறுதியளித்திருக்கிறார்.

யாழ். பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான பொறிமுறையை உறுதிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்கள் அடங்கிய புதிய சுற்றுநிருபம் ஒன்று அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் மிக நீண்ட தாமதம் குறித்து கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற விசே பேரவைக் கூட்டத்தின் போது பேரவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதனடிப்படையில் பரீட்சைக் கிளை கணினி மயப்படுத்தப்படாமையே அதற்குக் காரணம் என்று பீடாதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பரீட்சை முடிவுகளில் ஏற்படும் தாமத்துக்கான காரணம் குறித்த விவாதம் பேரவையின் போதும் பேசப்பட்டது. இதன்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் மிக நீண்ட தாமதத்துக்கு விடைத்தாள்கள் திருத்துவதில் ஏற்படும் தாமதமே காரணமாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பதிலளித்த தகுதி வாய்ந்த அதிகாரி, “விடைத்தாள்களைத் திருத்தும் பணி இனிவரும் காலங்களில் விரைவுபடுத்தப்படும். ஒவ்வொரு பரீட்சைகள் குறித்தும் அந்தத்தப் பீடச் சபைகள் ஒவ்வொரு மாதமும் ஆராய்ந்து மூதவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

விடைத்தாள் திருத்தும் பணிகளைத் தாமதப்படுத்தும் அல்லது செய்யத் தவறும் விரிவுரையாளர்கள், இரண்டாம் நிலை மதிப்பீட்டாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகளில் தவறிழைப்பவர்களின் கொடுப்பனவுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும்.

அத்துடன் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி, கடல் கடந்த கருத்தரங்குகள் போன்றவற்றுக்கு விடுமுறை பெறும் விரிவுரையாளர்களிடம் கையளிக்கப்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்பட்டு கையளிக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கான விடுமுறைகள் அனுமதிக்கப்படும். இந்த விடயங்களை உள்ளடக்கிய சுற்றுநிரூபம் அடுத்த வாரம் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

இதேநேரம், ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பட்டதாரி நியமனத்துக்காக, நிலுவையிலுள்ள பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கும், பரீட்சைக் கூற்றுக்களை விரைந்து வழங்குவதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7