அதிரடிப்படையினரால் நேற்று வேப்பங்குளம் பகுதியில் வாளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இன்று (புதன்கிழமை) ஒரு வாளுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட வீதி ரோந்து நடவடிக்கையின்போது வாளுடன் சென்ற இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப்படையினர் கையளித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அவர்கள் வழங்கிய தகவலினடிப்படையில் இன்று மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஒரு வாள் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஜந்து இளைஞர்களை விசாரணைகளின் பின்னர் நீதி மன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.