கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு காரணமாக பேருந்துகள் இயங்காத நிலையில், புதுக்கோட்டையில் உள்ள பணிமனையில், 200இற்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஒரு பேருந்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு நின்றிருந்த மேலும் 5 பேருந்துகளும் தீ பரவி அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைச்து செயற்பட்டதால் ஏனைய பேருந்துகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.