பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த விமானம் இந்தியா திரும்பும்போது விருப்பமுள்ளவர்கள் நாடு திரும்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பெய்ஜிங்கில் உள்ள தூதரகம் அறிவித்த அவசர தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 1770 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,048 பேர் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.