நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிர்பயாவின் தயார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் மருத்துவ மாணவியான நிர்பயாவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டும், அதனை நிறைவேற்றுவதில் இழுப்பறி நிலைமை நீடிக்கிறது.
இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய திகதியை அறிவிக்கக்கோரி திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளன.
இது குறித்து நிர்பயாவின் தாயாரான ஆஷா தேவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவர் மேற்படி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், பல நாட்கள் வந்து போய்விட்டன, ஆனால் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய திகதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
‘ஒவ்வொரு விசாரணையின்போதும் நாங்கள் புதிய நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு செல்கிறோம். குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் ஒவ்வொரு நாளும் புதிய தந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இன்று என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்’எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.