இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த வெடிப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிலையில் படுகாயமடைந்தவர் ஒரு காலை முற்றாக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரும்பு வியாபாரம் செய்யும் சூசைப்பிள்ளை புலேந்திரன் (வயது-42) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர் இரும்பு வியாபாரம் செய்பவர் எனவும் இதற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களை அவர் பிரித்தெடுக்க முயற்சித்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.