பனிப்பொழிவு பெய்யலாம் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்பகுதியில், ஐந்து முதல் 20 சென்டிமீட்டர் வரை ஈரமான, கடும் பனி பெய்யலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
மெட்ரோ வான்கூவரில் இருந்து ஃப்ரேசர் பள்ளத்தாக்கு வரையிலான ஒரு பகுதியிலும், சன்ஷைன் கடற்கரையையும் உள்ளடக்கிய பகுதியிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இப்பகுதியில் குளிர்ந்த காற்று பரவலாக இருக்கும், பனியின் இருப்பிடத்தைப் பொறுத்து மழை ஏற்படலாம். கடல் மட்டத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள் அதிக மழை எதிர்கொள்வார்கள். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பனியினை எதிர்கொள்வார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.