பிரான்ட்ஃபேர்ட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன்தொடர்புடைய ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, கனடா முழுவதும் கைது உத்தரவு கொண்டுள்ள நிலையான முகவரி இல்லாத 32 வயதான ஜேமி ட்ரைடன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹமில்ரனில் உள்ள அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு பெண்ணைக் கேடயமாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மிகவும் ஆபத்தானவர் என கருதப்பட்ட இவர், இரண்டு வார விசாரணையின் பின்னர், வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பிரான்ட்ஃபேர்ட்டின் பிரையர் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டடுள்ளார்.





