கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தியதைக் கண்டித்து அரசுக் கல்லூரி மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முனைந்துள்ளார்கள்.
குறித்த நடவடிக்கையினை பொலிஸார் தடுத்ததால் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அங்குள்ள மாணவர்கள் இரு வாரமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர்த்தப்பட்ட கட்டணம், இந்தியாவின் மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ள கட்டணத்தை விட பன்மடங்கு அதிகம் என மாணவ, மாணவிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சூழலில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.