நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில் குழந்தைகள் உழைத்த 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பிரித்தானியாவை மையமாகக் கொண்டு செயல்படும் சிரியாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90 ஆயிரம் பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக, சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டபோதும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.