LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 28, 2020

153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிப்பு- கல்வி அமைச்சு அறிவிப்பு

அதிபர்கள் நியமிக்கப்படாதிருந்த 278 பாடசாலைகளில் 153 தேசிய
பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் போது சித்தியடைந்தவர்கள் புதிய அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கல்விச்சேவை ஆணைக்குழுவினால் இவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் 373 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் 278 தேசிய பாடசாலைகளுக்கு உரிய தரத்திலான அதிபர்கள் இதுவரை காலம் நியமிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி அமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 373 தேசிய பாடசாலைகளில் 278 பாடசாலைகளுக்கு இதுவரை அதிபர் நியமிக்கப்படவில்லை. இதன்படி குறித்த வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் நேற்று முன்தினம் 153 பேருக்கு அதிபர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.என். சித்திரானந்த உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை இணைத்துக்கொள்வதற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளுக்கு அமைவாக அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழு வழங்கிய அங்கீகாரத்திற்கு ஏற்ப 153 அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7