
எதிர்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளன.
குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் தனித்தே போராடுவோம் என அவர் கூறியிருந்தார்.
இதுபோலவே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சியும் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
