LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 14, 2020

ஜிசாட்30 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்படுகிறது- இஸ்ரோ

இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள்,
தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து  எதிர்வரும் 17ஆம் திகதி ஏவப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில்,  இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது.

சுமார் 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்,  பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-5 ரொக்கெட்  மூலம் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த ஜிசாட்30 செயற்கைக்கோளானது  Ku-bandஇல்  இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பையும்,  C-bandஇல்  வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகளுக்கு விரிவாக்கப்பட்ட பாதுகாப்பை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7