
மணிநேரத்திற்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலை 10.35 – 12.25 மணிவரை விமானங்கள் பறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 18, 20, 21, 22, 23, 24 மற்றும் 26-ந் திகதிகளில் மொத்தம் 7 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 நாட்களும் விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
டெல்லியில் எதிர்வரும் 26ஆம் திகதி குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி கண்கவர் அணிவகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஒத்திகை நடக்கும் நாட்களிலும் குடியரசு தினத்தன்றும் டெல்லியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
