எயார் இந்தியாவின் பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான ஒப்புதல் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் எயார் இந்தியா விமானச்சேவை நிறுவனம் 7,600 கோடி இந்திய ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியிருந்தது.
இந்த நிலையிலேயே, அந்த நிறுவனத்தின் 95 சதவீத பங்குகளை தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது





