வாங்க யாரும் முன் வராவிட்டால் அது இன்னும் 6 மாதத்தில் மூடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள சூழலில் 6 மாதங்கள் வரை மட்டுமே ஏர் இந்தியாவால் தாக்குப்பிடிக்க முடியும் எனவும், பங்குகள் விற்பனை நடந்தால் மட்டுமே மேற்கொண்டு ஏர் இந்தியா தொடர்ந்து இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்போது நஸ்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை மீட்க மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்தும் அது பலன் தரவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.