படுகொலைபோல மற்றுமோர் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டள்ளதாக பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலை செய்யத் தூண்டிய நெல்லைக் கண்ணன் இன்னமும் ஏன் கைது செய்யப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
கல்யாணராமனின் முகநூல் பதிவிற்கு கைது செய்த பொலிஸார் பிரதமர், உள்துறை அமைச்சர் விடயத்தில் வெறும் வழக்குப்பதிவு மட்டும் செய்துள்ளது நாடகமா என்றும் அவர் கேட்டுள்ளார்.
நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கான தூண்டுதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே இந்த விடயம் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.