LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, January 5, 2020

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்!

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் (வயது74) நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தைச் சேர்ந்தவர்.

தற்போது முதுமை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் சி.எம்.சி. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் உடல்நிலை சற்று தேறியதால் அவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

உடனடியாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அவரைக் கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 8 மணியளவில் பி.எச்.பாண்டியன் காலமானார்.

குறிப்பு: மரணமடைந்த பி.எச்.பாண்டியன் அ.தி.மு.க.வின் ஆரம்பகால உறுப்பினராக இருந்தவர். கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் 3 முறை சட்டமன்ற உறுப்பியராக சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.



1980 முதல் 1985 வரை தமிழ்நாடு சட்டமன்ற துணைத்தலைவராக பதவி வகித்தார். 1985 முதல் 1989 வரை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்தார். அப்போது பல அதிரடி தீர்ப்புகளை வழங்கி சபாநாயகரின் அதிகாரங்களை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1989ஆம் ஆண்டு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்த போது, ஜானகி இராமச்சந்திரன் அணியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினராக இவர் இருந்தார்.

அதன்பிறகு அ.தி.மு.க. ஒன்றாக இணைந்த பின்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பி.எச்.பாண்டியனுக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கினார். கடந்த 1999ஆம் ஆண்டு இவர் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் இருந்த சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலாக இவர் குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து தற்போது அ.தி.மு.க.வின் மூத்த தலைவராக ஆலோசனை வழங்கி வந்தார். இவரது மகன் மனோஜ் பாண்டியன் தற்போது அ.தி.மு.க. அமைப்புச்செயலாளராக உள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7