LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, January 5, 2020

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- சிறப்பு சுற்றுலாத் திட்டத்தை ஆரம்பித்தது அரசு

பொங்கல் விடுமுறையில் 3 நாட்கள் அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு சுற்றுலா இவ்வாண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ

இந்தச் சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு இந்திய மதிப்பில் 4 ஆயிரத்து 300 ரூபாயும் சிறியவர்களுக்கு 3ஆயிரத்து 450ரூபாயும் கட்டணமாக அறவிடப்படவதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “பொங்கல் விடுமுறையில் 3 நாட்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுற்றுலா என புதியதாக இவ்வாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சுற்றுலா பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று அதாவது திருவள்ளுவர் தினத்தில் இரவு 9 மணிக்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து மதுரைக்கு சென்று அங்கிருந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டை காண்பதற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாவிற்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் பயன்படுத்தப்படும் சொகுசு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது 16ஆம் திகதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு மதுரையை சென்றடையும். அதன்பின்னர், 17ஆம் திகதி காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் சென்றடையும்.

காளைகளின் வீர விளையாட்டை பார்வையிட்ட பின்னர் இரவு மதுரையில் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

காணும் பொங்கல் மறுநாள் 18ஆம் திகதி காலையில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோயில் ஆகிய இடங்களுக்கு வழிகாட்டி உதவியுடன் அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் அன்றிரவு 10 மணிக்கு மீண்டும் பயணத்தை ஆரம்பித்து 19ஆம் திகதி அதிகாலை சென்னையை வந்தடைவார்கள்.

இச்சுற்றுலாவிற்கு பெரியவர்களுக்கு ரூ.4,300 மற்றும் சிறியவர்களுக்கு (6-12 வயது) ரூ.3,450 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இச்சுற்றுலாவிற்கு குளிர்சாதனப் பேருந்து இயக்கப்படும். குளிர்சாதன வசதியுள்ள அறை வேண்டுவோருக்கு ரூ. 4500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7