அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்படும் என தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
அகழ்வாராய்ச்சிக்கான இடம் ஜி.பி.ஆர் உள்ளிட்ட 3 கருவி மூலம் தேர்வு செய்யப்படும் என இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
இதன்படி மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கான இரட்டை சுவர்கள், மண் பானைகள் என்பன கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் குறித்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில் அதன் 6 ஆம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.