
சவாலுக்கு உட்படுத்துவது முறையல்லவென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, தனது கட்சி உறுப்பினர்களுடன் இன்று (வியாழக்கிழமை) மதியம் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தேசிய பிரச்சினைகள் ஆகியவை தொடர்பாக அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பப்பட வேண்டியது அவசியம் எனவும் ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை குறித்த கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவதுவல, “ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே அரசாங்கத்தை ஜனாதிபதி கோட்டாவிடம் வழங்கியுள்ளோம்.
மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பானமை எம்மிடமே உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது தொடர் அடக்குமுறைகளும் பழிவாங்கல்களும் பிரயோகிக்கப்படுமேயானால் ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரையை சவாலுக்கு உட்படுத்தி வாக்கெடுப்பில் தோல்வியடைய செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும்போதே ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் உரையை சவாலுக்கு உற்படுத்துவது முறையல்ல என குறிப்பிட்டுள்ளார்.
