ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை எம்மால் பெற முடியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் இருக்கின்ற ஒருசிலர், வருடத்தின் முதல் நாள், வெசாக் தினம், புதுவருட பிறப்பு உள்ளிட்ட நாட்களில் ஒவ்வொரு விதமான கொள்கைகளை எடுத்துக்கொள்வார்கள்.
அதாவது கசிப்பு அருந்துவதில்லை, தவறுகள் செய்வதில்லை என ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான செயற்பாடுகளை மேற்கொள்ளப்போவதாக தங்களுக்குள் சபதம் எடுத்துக்கொள்வார்கள். இவ்வாறான செயற்பாடுகள் வழமையே ஆகும்.
ஆனால் இத்தகைய தவறான செயற்பாடுகளை முற்றாக இல்லாமல் செய்வதற்கு கற்றிந்த சமூகத்தினராலேயே முடிவுக்கு கொண்டுவர முடியும். எனவே நாம் அனைவரும் நாட்டிலுள்ள குழந்தைகள் மீதே அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
அதாவது சமய கல்வி நிலையங்களே சிறந்த மனிதனை உருவாக்குகின்றது. எனவே பிள்ளைகளை எப்படியாவது அக்கல்வியை பெற்றுக்கொள்வதற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவையான கல்வியை பெற்றுக்கொடுப்பதில் பெற்றோர் முழு கவனத்தினை செலுத்த வேண்டும். சிறந்த கல்வியை பெற்று வருபவர்களினால்தான் நாட்டிலுள்ள பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை முன்வைக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.