உயர்மட்டத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி (Qasem Soleimani) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரையும் அமைதி காக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவில் நடத்தப்பட்ட வான்வழி ஏவுகணைத் தாக்குதலில் இன்று அதிகாலை பக்தாத் விமான நிலையத்தில், உள்ளூர் ஈரான் ஆதரவுப் போராளிகளுடன் சேர்ந்து அவர் கொல்லப்பட்டார்.
தளபதி சோலெய்மனி முன்வைத்த ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை பிரித்தானியா விளங்கிக்கொள்வதாகவும் ஆனால் மேலதிகத் தாக்குதல்களில் பிரித்தானியாவுக்கு நாட்டமில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய தளபதியின் அமெரிக்க படுகொலை மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தான தாக்குதல் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின், ஈரான் மற்றும் அமெரிக்காவிடமிருந்து பிரித்தானியா கட்டுப்பாட்டைக் கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி மத்திய கிழக்கில் தற்போது சுமார் 400 பிரிட்டிஷ் துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் சுமார் 400 பிரித்தானியப் படையினர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.