கிளிநொச்சியில் சட்டவிரோத அகழ்வு முயற்சி தொடர்பாக 3 கப்டன்கள் மற்றும் சிப்பாய்கள் அடங்கலாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் தங்கம் இருப்பதாகத் தெரிவித்து சிலருடன் இணைந்து இரகசியமாக JCB இயந்திரம் மூலம் தேடுதல் மேற்கொண்டதாக இவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி இல்லாது மேற்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று CCMP இனரால் மேற்குறித்தவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொள்கின்றனர். அகழ்வு மேற்கொள்ளப்பட்ட காணியானது விடுதலைப் புலிகளின் நிர்வாக சேவை அலுவலகம் அமைந்திருந்த காணி என்பதும், குறித்த காணி படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





