இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள போஸ்ரர்கள் பலவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் நாளை உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ளது.
பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளதுடன் அனிருத் இசையமைத்துள்ளார்.
ரஜினியின் 167-வது படமான தர்பார் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது.
ரஜினியின் படம் வெளியாகவுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், படத்தை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள பல போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் குறிக்கும் விதமாக பல போஸ்ரர்கள் தர்பாருக்காக அவரது ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ளன.
மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்ரரில், ‘தமிழக வளர்ச்சிக்கு தேவை தென்னிந்திய நதிநீர் இணைப்பு. அதற்கு உன் தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு’ என்ற வாசககம் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு போஸ்ரரில் ‘இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
திருச்சியில் திரையரங்கு ஒன்றின் முன்பு அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தின் மாதிரி போன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதில் 2021 தமிழக தர்பார் என எழுதப்பட்டு அருகில் ரஜினி நிற்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.