கதிர்காமம் புனித பூமிக்கு பிரதமர் மஹிந்தராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அங்கு இடம்பெற்ற விசேட சமய வழிபாடுகளில் பிரதமர் மஹிந்த ஈடுபட்டுள்ளார்.
மேலும் கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி மற்றும் ஏனைய தேரர்களையும் சந்தித்து பிரதமர் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





