லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாஃபியா’ படத்தின் இரண்டாவது டீசர் தற்போது வெளியாகியுள்ளது.‘துருவங்கள் 16’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ‘மாஃபியா’ திரைப்படம் உருவாகி வருகிறது.
ஏற்கனவே இப்படத்தின் முதலாவது டீசர் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில், தற்போது இதன் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.
அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.





