
படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்படவில்லை என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அமைச்சரவை முடிவுகளை அறிவித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இந்த படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் எவ்வாறாயினும், இந்த சதித்திட்டம் தொடர்பான விவரங்கள் குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
ஜனாதிபதி அல்லது அவரது குடும்ப உறுப்பினரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
