ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) காலை இடம்பெற்றிருந்தது.
இதன்போதே வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கடந்த காலத்தில் அரசாங்கம் இருந்தா இல்லையா என்பது தெரியவில்லை. அவ்வாறான நிலையிலேயே பல செயற்பாடுகள் இடம்பெற்றது.
ரிசாட் பதியுர்தீன் முஸ்லீம்கள் மட்டுமே இங்கு இருப்பதாக நினைத்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருந்தார். எனினும் நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. இங்கு வாழும் மூவின மக்களுக்கும் சமமாக வளங்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும்.
தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் ஒரே மாத்திரியான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபயவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. சிவமோகன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி ரிசாட் பல வேலைகளை செய்திருந்தார். தமிழ் தேசியிக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது தொடர்பாக கதைக்கமாட்டார்கள்.
ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடு கொடுத்துள்ளார்.
காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பேரூந்து நிலையத்திற்கு தீர்வை காணுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பல வேலைத்திட்டங்களை மக்களை அலையவிடாமல் செய்ய வேண்டும். அவ்வாறு இணைந்து வேலைத்திட்டத்தினை செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.
அவ்வாறு செய்ய முடியாதவர்கள் எனது தலைமையில் ஒருங்கிணைப்பு குழு இருக்கும் போது அங்கு இருக்க முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.