
வகையில் இலங்கையின் புலனாய்வு அமைப்புகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என சிங்கப்பூரின் நயாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக நேற்று சாட்சியம் அளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் இணையத் தாக்குதல் அச்சுறுத்தலை அங்கீகரித்து அவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன. எனினும் இலங்கையில் தயார்நிலை போதுமானதாக இல்லை.
இலங்கை புலனாய்வு அமைப்புகளும் தொடர்புடைய நிறுவனங்களும் இணையத் தாக்குதல்களைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
புலனாய்வு அமைப்புகளுக்கு இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தரவு சேகரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இலங்கையின் புலனாய்வு அமைப்புகள் நவீன மயமாக்கப்பட்டு தயாராக இருக்கவேண்டும். இது ஒரு முக்கியமான துறை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
